புதூரில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் கொண்டாட்டம்..!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நல்லதெட்ட உதவிகள் வழங்கியும், முதியோர் காப்பகங்கள், குழந்தைகள் காப்பகங்களில் அன்னதானங்கள் வழங்கும் சிறப்பித்து வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் புதூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கனிமொழி எம்.பி. பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள், பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.