சாத்தான்குளம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவன் தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - அடப்புவிளை பகுதியை சேர்ந்த மகன் பாலகிருஷ்ணன்(19), இவர் கொம்மடிக்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார், இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார், இதைப்பார்த்த உறவினர்கள் உடனே அவரை சாத்தான்குளத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்,இது குறித்து தட்டார் மடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.