தூத்துக்குடி அருகே கடன் பிரச்சனை காரணமாக தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி அருகே உள்ள வடக்குஆத்தூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (72) ,என்பவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் தொழிலில் அதிககடன் பிரச்சனை காரணமாக ராஜகோபால் தனது கடையில் வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.