தூத்துக்குடியில் காரில் ரூ,6 லட்சம் மதிப்பிலான 450 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 4 பேர் கைது.
தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் சோதனைகளில் பட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பதில் விற்பனைக்காக ரூ,6 லட்சம் மதிப்பிலான 450 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்த மகேஷ் செல்வம் (35), கோவிந்தராஜ்(23), காந்தி(21),வசமுத்து(23) ஆகிய ஆகிய நான்கு பேரையும் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.