தூத்துக்குடியில் பொருநை இலக்கியதிருவிழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இன்றைய தினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பாக நடைபெற்ற பொருநை இலக்கியதிருவிழா துவக்க விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாணையக் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார்கள். நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத்,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஆல்பர்ட் ஜாண் உட்பட கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.