தூத்துக்குடி அருகே  குளத்தில் குளிக்க சென்ற முதியவர் உயிரிழப்பு.


தூத்துக்குடி அருகே உள்ள செட்டியூரணி கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் நமச்சிவாயம் (77), இவர் கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டாப்பறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.