உடன்குடி அருகே சிவந்தி மகளிர் கலைக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பிறைகுடியிருப்பில் உள்ள சிவந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் தலைமை உரையாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் லீலா அவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டால் நமது நாடு அடைந்துள்ள கீழ்மை நிலை மற்றும் அதனை தடுக்கும் திறன் பெற்றவர்கள் நம் மாணவ சமுதாயத்தினர் என்று தற்போதைய நிலை மற்றும் மாணவர்களின் கடமை குறித்து உரையாற்றினார். மேலும் போதை தடுப்புக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஜெயக்குமாரி அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டு குறித்து மாணவர்கள் அறிய நேரிட்டால் அதனை பெற்றோர்கள் பேராசிரியர்கள் மற்றும் காவல் துறையில் முறையிடலாம் என்று அறிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் செல்ஷியா அவர்கள் போதை பொருளை வற்புறுத்துபவரிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் முறைமைகளை விளக்கினார். போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை ஆங்கிலத்துறை மாணவி ஷர்மிளா வாசிக்க பிற மாணவர்களும் துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் வழி மொழிந்தனர். இந்நிகழ்வை கணிதத்துறை பேராசிரியர் ஜெயக்குமாரி அவர்களும் ஆங்கிலத்துறை பேராசிரியர் செல்ஷியா அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.