தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாசாணம் என்பவரின் மகன் பரமசிவம் (57), இவர் பொருட்கள் வாங்குவதற்காக ஆத்தூர் மெயின் பஜார் சென்று விட்டு வீடு திரும்ப சாலையைக் கடக்கும் முயன்ற போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் பரமசிவம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பரமசிவம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் பரமசிவம் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டிய இளைஞரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.