தூத்துக்குடி அருகே நீதிமன்ற காவலர் அரசு பேருந்தின் மீது மோதி உயிரிழப்பு.
தூத்துக்குடி அருகே செக்காரக்குடி பகுதியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (25), இவர் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில் நெல்லையப்பன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தபோது, தூத்துக்குடி மறவன் மடம் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், நெல்லையப்பன் பின்னால் வந்த அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெல்லையப்பன் உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.