தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளரைவிட 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சி.த.செல்லபாண்டியன் விமான நிலையத்தில் பேட்டி.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.த.செல்லபாண்டியனுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில், அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்ற அவர் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி-யில் தன்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளரைவிட 50.ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக பேசிய அவர், தூத்துக்குடி தொகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுப்போம் தூத்துக்குடியை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று திமுக கட்சி மாதிரி பொய்கள் சொல்லமாட்டோம் ஆனால் தூத்துக்குடிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்து தெரிவித்தார்.