தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மேரிஷீலா முன்னிலை வகித்தார். முனைவர்.ஆ.சம்பத்குமார் மற்றும் வழக்கறிஞர் ரவிக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகி சுபேதார் கருப்பசாமி, ஒய்எம்சிஏ அமைப்பின் ஆர்ம்ஸ்டார்ங்க், ஷீலா ஜாஸ்மின்,  மக்கள் நீதிமய்யம் கட்சியின் இராதாகிருஷ்ணன், ரமேஷ், பகத்சிங் இரத்ததான அறக்கட்டளையின் காளிதாஸ், லட்சுமணன், ஐஎன்டியுசி ராஜசேகரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாடசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார், தர்மம் வெல்லும் அறக்கட்டளையின் பூலோகப்பாண்டியன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் தேவராஜ், சுபத்ரா, மற்றும் தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.