விளாத்திகுளம் அருகே தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது-சீறிப்பாய்ந்த 57 ஜோடி மாடுகள்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, பூஞ்சிட்டு,சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் என்று ஏராளமானோர்கண்டு ரசித்தனர். இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை முதலாவது போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தொடங்கி வைத்தார்,நடைபெற்ற இரண்டாவது நடைபெற்ற போட்டியை ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விளையாட்டு
பூசனூர் பூஞ்சிட்டு பந்தயம் இரண்டாவது சுற்று!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு!
அடுத்த
பூசனூர் பூஞ்சிட்டு பந்தயம் முதல் சுற்று!
இதையும் படிக்கலாம்
நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை இசை விழா!
25 Apr 2025
இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
21 Feb 2025
புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
06 Nov 2024
படர்ந்தபுளியில் மாபெரும் மாநில அளவிலான வாலிபால் போட்டி!
06 May 2024