தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதவா தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அரசு பள்ளியில் ஆசிரியர் நியமனம் என்ற பெயரில் சுமார் 3000 ஆசிரியர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி தொண்டு நிறுவன தலைவர் தலைமறைவு பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்களுக்கு நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பால குமரேசன் என்பவர் ஆதவா தொண்டு நிறுவனம் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை ஒத்துழைப்புடன் 3000 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மாதம் 15 ஆயிரம் சம்பளம் என்று கூறி ஆசிரியர்களிடம் ரூபாய் 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது
நியமனம் செய்யப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது தொண்டு நிறுவன தலைவர் பாலகுமாரேசன் தலைமறைவானதுடன் முறையான பதிலும் அளிக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண் ஆசிரியர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி கல்வித்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய சம்பளத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தாங்கள் அளித்த பணம் ரூபாய் 3 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் பணத்தை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தூத்துக்குடியில் ஏற்கனவே நீம் தொண்டு நிறுவனம் மூலம் ஆசிரியர் நியமனம் என்ற பெயரில் மோசடி நடைபெற்ற சூழ்நிலையில் தற்போது ஆதவா தொண்டு நிறுவனம் அரசு பள்ளியில் ஆசிரியர் நியமனம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி
ஆதவா தொண்டு நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
TMB வங்கியில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தவில்லை செயல் அதிகாரி கிருஷ்ணன் பேட்டி!
அடுத்த
திட்டங்குளத்தில் தீப்பெட்டி ஆலை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து-பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026