தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தவில்லை ஒரு சில வாடிக்கையாளர்களின் ஸ்பெசிஃபைடு பைனான்சியல் ட்ரான்ஸ்சாக்சன் என்ற அடிப்படையிலான பண பரிவர்த்தனை குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்கள் இதில் வருமான வரித்துறையினர் சுட்டிக்காட்டிய குறைகள் அனைத்தும் களையப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடியில் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன்  தெரிவித்தார்தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டம் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்ற வங்கியின் முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து வங்கியின் நிர்வாக அதிகாரி மற்றும் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார் ,அப்போதுவங்கியின் நிகர லாபம் காலாண்டில் ரூபாய் 261 கோடியாக உள்ளது கடன்கள் மூலம் கிடைக்கப்படும் வட்டி வருவாய் ரூபாய் 1002 கோடியிலிருந்து ரூபாய் 1156 கோடியாக உயர்ந்துள்ளது மேலும் இதர வருவாய் ரூபாய் 140 கோடியிலிருந்து 167 கோடியாக உயர்ந்துள்ளது வாரா கடன் 1.69 சதவீதத்திலிருந்து 1.56 ஆக குறைந்துள்ளது என்றார்,மேலும் வங்கியின் வைப்புத் தொகை 43 ஆயிரத்து 233 கோடியிலிருந்து ரூபாய் 47.008 கோடியாக உயர்ந்துள்ளது என்றார் மேலும் இந்த காலாண்டில் ஆறு புதிய கிளைகள் துவங்கப்பட உள்ளது என்ற அவர் சந்தை வணிகத்தை ஈர்க்க எம் எஸ் எம் இ கடன் செய்லாக்க மையம் சென்னை மதுரை கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் துவங்கப்பட்டுள்ளது என்றார், மேலும் வருமான வரித்துறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரெய்டு நடத்தவில்லை அவர்கள் சர்வே அதாவது வருமான வரித்துறையினர் நேரடியாக வங்கிக்கு வந்து பண பரிவர்த்தனை குறித்த ஆய்வை மேற்கொண்டார்கள் ஒரு சில வாடிக்கையாளர்களின் ஸ்பெசிஃபைடு பைனான்சியல் ட்ரான்ஸ் ஆக்சன் பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்தார்கள் இதில் வருமான வரித்துறையினர் சுட்டிக்காட்டிய குறைகள் அனைத்தும் முழுமையாக களையப்பட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  பேட்டி -கிருஷ்ணன் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி