தூத்துக்குடியில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.
தூத்துக்குடி - முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதியில் சேர்ந்தவர் அய்யாபழம் என்பவரின் மகன் ஜேசுதாசன் (22), இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தூத்துக்குடி சென்று கொண்டிருந்தபோது சவேரியார்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜேசுதாசன் படுகாயம் அனைத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.