தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த குணசேகர் (23), இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, துறைமுக பைபாஸ் சாலையில் இவர் இரு சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், குணசேகர் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.