தூத்துக்குடி அருகே விவசாயிடம் ரூ,5000 லஞ்சம் வாங்கிய "VAO" கையும் களவுமாக கைது!
தூத்துக்குடி அருகே உள்ள கீழ தட்டாபாறை கிராமத்தை சேர்ந்த சுதாகர் (70) என்ற விவசாயிடம் நிலம் வழிகாட்டு மதிப்பீட்டு மறு ஆய்வு செய்வதற்காக, வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் எட்டுராஜ் (53), ரூ,5000 லஞ்சம் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர்பால் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் எட்டுராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.