தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்த ஆட்டுச்சந்தையை மீண்டும் கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கோவில்பட்டி நகரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகள் 77 பேர் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் சில குழந்தைகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வேலுநாச்சியார் வேடமணிந்து வந்து இருந்தனர். கையில் தேசிய கொடியை வைத்தபடி தமிழக முதல்வருக்கு தங்களது கோரிக்கை கடிதத்தினை தபால் பெட்டியில் போட்டனர். தபால் அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு சிலை வைக்க வேண்டும் - தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பிய குழந்தைகள் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா திருத்தேர் பவனி!
அடுத்த
இந்திய சப்- ஜீனியர் ஹாக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தூத்துக்குடி மாவட்ட வீரர்கள் தேர்வு!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026