தூத்துக்குடியில் ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூபாய் 17 லட்சம் மோசடி செய்தவர் கைது; சைபர் குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை. தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி ராணி என்பவரின் செல்போன் எண்ணுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை பார்த்த ராணி தனது மகனின் வேலைக்காக அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் ஏர்போர்ட்டில் வேலை பெற ஆசை வார்த்தைகள் கூறி ரூபாய் 16,61,038/- பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த ராணி இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட ராணி அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார், சைபர் குற்ற பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி, மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்,ராணியிடம் பணம் மோசடி செய்தவர் டெல்லி, ஜமீயாநகர் பகுதியை சேர்ந்த மொஹத் அபுஷார்கான் (22) என்பது தெரியவந்தது.உடனே தனிப்படை போலீசார் டெல்லி சென்று மொஹத் அபுஷார்கானை கடந்த 17.09.2023 அன்று புதுடில்லி ஷாஹீன்பாக் காவல் நிலையம் முன்பு கைது செய்து, டெல்லி நீதிமன்றத்தில் (THE HON"BLE COURT OF MS CHHAVI BANSAL, M.M, SAKET COURT SOUTH DELHI)ஆஜர்படுத்தி Transit Warrant பெற்று பின்னர் இன்று தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.மேலும் விசாரணையில் மொஹத் அபுஷார்கான், பொதுமக்களிடம் மோசடியாக பணத்தை பெற்று, வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார். என்பதும், அதேபோன்று இவரது அண்ணன் வங்கி கணக்குகளிலும் மோசடி செய்த பணத்தை பெற்று பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் இந்த மோசடியில் பலநபர்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களை கைது செய்யும் பொருட்டு சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூபாய் 17 லட்சம் மோசடி செய்தவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மணியார்டர் மூலம் மகளிர் உரிமைத்தொகை !
அடுத்த
17 கிராம ஊராட்சிகளுக்கு புதிய மின்கல வண்டிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026