விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 17 கிராம ஊராட்சிகளுக்கு ரூபாய் 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை  எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கொடி அசைத்து   துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு  மேலாண்மை திட்டப் பணிகளுக்கு ரூபாய் 42 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி அசைத்து   துவக்கி வைத்தார்.  இந்நிகழ்வில் புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுசிலா தனஞ்செயன்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.