ஓட்டப்பிடாரம் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது: சீறிப்பாய்ந்த 39 ஜோடி மாடுகள்!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி கருப்பசாமி, ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் சித்திரை கொடை விழாவில் முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, போட்டியானது சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்றது,இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 39 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான இளையராஜா கொடி அசைத்து தொடங்கி வைத்தார், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக  பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.