ஓட்டப்பிடாரம் அருகே பூக்குழி இறங்கும் விழாவில் தீயில் விழுந்த பெண்பக்தர்!  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை மாத  திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இதில்பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பெண்பத்தர் ஒருவர் நிலை தடுமாறி தீயில் விழுந்தார், பின்னர் சுதாரித்து தானாகவே எழுந்து, தீ மிதித்து வெளியேவந்தார்,பின்னர்கோவில் நிர்வாகத்தினர்அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூக்குழி இறங்கும் விழாவில் பெண் பக்தர்கள் தீயில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.