தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நான் முதல்வன் திட்ட உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் ஜெயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயபிரகாஷ் ராஜன், சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் வரவேற்று பேசினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் ஜி.சந்தன மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்படோர் நல அலுவலர் டி.விக்னேஸ்வரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஜெ.ஏஞ்சல் விஜய நிர்மலா, ஸ்டேட் வங்கி பஜார் கிளை மேலாளர் அறிவழகன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமார், ஒருங்கிணைப் பாளர்கள் சுடலைமணி, ஜான்சன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மைய உதவி இயக்குநர் ம.பேச்சியம்மாள் நன்றி கூறினார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
அடுத்த
மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பருவம் நோய் தினத்திற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026