எட்டையாபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் மீது கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் - கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை!




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 292 மாணவிகள் பயின்று வருகின்றனர். 



இந்நிலையில் அந்த பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் அக்கல்லூரி‌ விரிவுரையாளர் மீது பாலியல் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது..



இதுகுறித்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள குழு அந்த மாணவியின் புகாரி விசாரித்து வருவதாக  கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 



அதேபோன்று விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும் புகார் கொடுத்த மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 



புகார் வந்துள்ளது விசாரணை நடத்தி வருகிறோம் என்று கல்லூரி மற்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது தவிர மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.