எட்டையபுரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. பன்னீர் செல்வம் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. பன்னீர் செல்வம் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முன்னாள் எம்.பி. பன்னீர் செல்வம் சட்டமன்ற தொகுதிக்கான பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சியினருக்கு ஆலோசனை கூறினார். கட்சியினர் அனைவரும் 2026-ல் அதிமுக ஆட்சியமைக்க கடுமையாக கட்சி பணியாற்ற வேண்டும் என்றும், அதிமுகவில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் விளையாட்டு பிரிவுக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் படிவங்களை கட்சியினரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் எட்டையபுரம் நகர அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.