எட்டையபுரம் நீட் தேர்வு மையத்தில் 348 தேர்வர்கள் பங்கேற்பு ; சைனஸ் பிரச்சினை மாணவிக்கு கைக்குட்டை கூட அனுமதி மறுப்பு!



தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மையமான எட்டையபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 360 தேர்வர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி, மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு தேர்வர்கள் கல்லூரியின் வாயிலில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு 360 பேரில் 348 பேர் மட்டுமே தேர்விற்கு வந்துள்ளனர், ஆண்கள் 121 பேர் பெண்கள் 227 பேர், மொத்தம் 348 பேர் மட்டும் கலந்து கொண்டனர்,மேலும் நீட் தேர்வில் எழுதுவதற்கு 12 பேர் வரவில்லை. இதில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவருக்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது எனக்கு கைக்குட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பெண் காவலாளியிடம்   கெஞ்சியும் அதனை அங்கிருந்த காவலாளிகள் அனுமதிக்கவில்லை. 


மேலும், இந்த தேர்வு மையத்தில் ஒரு அறையில் 24 மாணவ - மாணவியர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு அறைக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் 2 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  இதையொட்டி இன்று எட்டையபுரம் நீட் தேர்வு மையத்தில் 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.