விளாத்திகுளம் அருகே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 110 வீடுகள் கட்டுவதற்கு MLA மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட K.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நிலம் இல்லாத நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் 110 பயனாளிகள் கலைஞரின் கனவு இல்லம் 2025-2026-ன் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று 110 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலமாக வீடுகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வீடுகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல் உட்பட அதிகாரிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.