சிவனடியார்கள் சிறப்பு பற்றி திருத்தொண்டத் தொகை புனையவே சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரம் புரிந்தார்.அதுவே மிகப்பெரிய அடியார்களுக்குப் பெருமை நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி,அதை மூலமாக வைத்தே தெய்வ சேக்கிழார் அவர்கள் பெரியபுராணம் நமக்களித்தார், நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தமக்கென வாழாமல் சிவத்தையே சிந்தித்தும் அடியார் தொண்டும் சிவாலய கைங்கரியமும் வாழ்க்கையின் உன்னத இலட்சியம் என வாழ்ந்து காட்டியவர்கள்,உலக அறம் பற்றி கவலை கொள்ளாமல் சிவ புண்ணியத்தையே சிந்தித்தனர் அதனால் தான் பிள்ளைக்கறி சமைக்கவும் ,தன் மனைவியையே அடியாருக்கு கொடுக்கவும் மகன் பிணத்தை மூடி வைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கவும் ,திருமணம் அன்று மகள் கூந்தல் அரிந்து கொடுக்கவும் , கண்ணையே பெயர்த்து வைக்கவும்,தனக்கு இல்லாவிட்டாலும் கிடைத்த ஒரு மீனையும் இறைவனுக்கு கொடுக்கவும் ,சிவவேடத்துக் காக உயிர் கொடுக்கவும் தந்தையே ஆனாலும் சிவபூசைக்கு தடை நேர்ந்தால் காலை வெட்டவும் கூடிய செயற்கரிய செயல்கள் அவர்களால் செய்ய முடிந்தது,உலக அறம் மாறுபடும் நாம் பார்த்து மாற்றிக் கொள்ளலாம் உதாரணமாக 15 வருடங்க ளுக்கு முன் மிதிவண்டியில் இரண்டு பேர் பயணம் செய்தால் முன்பகுதியில் விளக்கு இல்லையென்றால் அபராதம் போடுவார்கள் இப்பொழுது இல்லை 20 வருடங்களுக்குமுன் வானொலி பெட்டிக்கு உரிமம் பெற வேண்டும் இப்பொழுது இல்லை .இன்னொன்று நாம் யாரையாவது கொலை செய்யலாம் என்று நினைத்தால் குற்றமாகாது ஆனால் அப்படி நாம் எண்ணிவிட்டாலே அந்த செயல் முடிந்ததாக கடவுளிடம் நமக்கு தண்டனை கிடைக்கும் அது தான் உலக அறத்துக்கும் சிவ அறத்துக்கும் உள்ள வேறுபாடாகும் மனைவி தவிர மற்ற பெண்களை தவறானகண்ணோட்டத்தில் நோக்கல் அடுத்தவர் களின் துன்பம் கண்டு இன்புறுவது என இன்ன பிற செயல்களைப் பட்டியலிடலாம்.செயற்கரிய செய்தோர் பெரியோர் என்பது பெரியோர் வாக்கு அப்படிப்பட்ட உயர்ந்த அடியவர் பெருமையை உலகுக்கு கூற இறைவனே தன் நிழலாகவே உள்ள சுந்தர மூர்த்திசுவாமிகளை அனுப்பினார் என்றால் எவ்வளவு பெருமைக்கும் வணங்குதலுக்கும் உரியவர்கள் .நமது அவ்வை பிராட்டியார் அவர்கள் பாடல் மூலம் யாவருக்கும் எளிதில் புரியும் வகையில் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைக் காண்போம்,
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் அடியவர்க்கு அடியவர்கள் அமைப்பு சார்பாக ஆனி மாதம் நாயன்மார்கள் குருபூஜை நிகழ்ச்சி கான்சாபுரம் பால விநாயகர் கோவில் சத்திரத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது, இதில் சிவனடியார் பெருமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிவ சிந்தனையில் இன்புற்று திளைக்க சிவ பாடலை பாடி சிறப்பித்தனர்.
ஆன்மிகம்
எட்டயபுரத்தில் அடியவர்க்கு அடியவர்கள் ஆனி மாத நாயன்மார்கள் குருபூஜை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் சண்முக பாண்டியன் நடிக்கும் ஆக்சன் திரைப்படம்!
அடுத்த
குளத்தூரில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் கபடி போட்டி!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026