தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன்,
என்பவரின் 1ஆடும், அதே கிராமத்தை சேர்ந்த கணேசன்
என்பவரின் இரண்டு ஆடுகளும், பிள்ளையார்
நத்தம் கிராமத்தை சேர்ந்த மூக்கையா என்பவரின் இரண்டு ஆடுகளும் 20-02-2024 செவ்வாய்க்கிழமை இரவு வீட்டு தொழுவத்தில்
கட்டப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து 21-02-2024
ஆடுகளின் உரிமையாளர்கள்
மாரீஸ்வரன்,கணேசன்,மூக்கையா
ஆகியோர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில்
புகார் அளித்ததின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடை பயிற்சி மேற்கொண்ட இளம் பெண்ணிடம்
மிளகாய் பொடி தூவி செல்போன் பறிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விளாத்திகுளம் காவல் உட்கோட்ட பகுதிகளில்
விளாத்திகுளம் புதிய DSP ராமகிருஷ்ணன் உத்தரவின்
பேரில், விபத்தை
தடுக்கும் பொருட்டு காலை மற்றும் மாலை இருவேளைகளில் (Drunk and Drive) வாகன சோதனையில் ஈடுபடுவது
வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இரவு நேரங்களில்
ஆடுகள் திருட்டு மற்றும் தொடர் திருட்டை தடுக்க புதிய DSP நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது
விளாத்திகுளம் பகுதி அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது...
குற்றம்
விளாத்திகுளம் பகுதிகளில் ஆடுகள் திருட்டு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயத்திற்கு வண்டல் மண் / கரம்பை மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்... ஆட்சியர் அறிவிப்பு!
அடுத்த
புகையிலை கடத்தியவர் கைது.