தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் 21-02-2024 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கீழஈரால் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 சாக்குகளில் 80 ஆயிரம் மதிப்புள்ளதமிழக அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ்,பான்மாசால,குட்டகா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் ரவிக்குமார் (49) என்பவரை எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.