விளாத்திகுளம் அருகே பெண்ணிடம் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடியவர் வடமாநில இளைஞர் கைது - திருடப்பட்ட ரூபாய் 70,000/- மதிப்புள்ள 2 சவரன் தங்க நகை மீட்பு.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சேகர் (66) என்பவரது மகள் நேற்று (22.09.2023) வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த பீகார் மாநிலம் ரகுநாத்பூர் பகுதியைச் சேர்ந்த சிவநந்தன் மகன் சோனுகுமார் (22) என்பவர் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடி சென்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சந்திரசேகர பாண்டியன் வழக்குபதிவு செய்து எதிரி சோனுகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 70,000/- மதிப்புள்ள 2 சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்தார்.
Vilathikulam
தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடிய வடமாநில இளைஞர் கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்- கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு ரயில்வே நிலையத்தை முற்றுகை!
அடுத்த
கூட்டுறவு வங்கியின் காசோலைகளை மோசடி செய்த 3 பேர் கைது .
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026