விளாத்திகுளத்தில் ரூ.28.10-லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டுறவு சங்க வணிக வளாகம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பன்முக சேவை கூட்டுறவு சங்கங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.28.10-லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார். 

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.