விளாத்திகுளத்தில் ரூ.24.50-லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி,13-வது வார்டு,காமராஜ் நகர் 4-வது தெருவில் பொது நிதியிலிருந்து ரூ.24.50-லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.