விளாத்திகுளம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது! 




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் உத்திரகுமார்(42). இவரின் 14 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மனைவி கூலி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரகுமார் தனது 14 வயதுடைய சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தனது கணவர் உத்திரகுமார் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்திரகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள காமக்கொடூரன் உத்திரகுமார் காது கேளாதவர் என்றும், வாய் பேச முடியாதவர் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...