தலைமைத்துவத்தில் பெண்கள் என்ற தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி!
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில், வணிக நிர்வாக துறை சார்பில் நடத்தப்பட்ட 'தலைமைத்துவத்தில் பெண்கள்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தேசிய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், அர்ஜுனா விருது பெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கனிமொழி எம்.பி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் முதல்வர் Dr.ஸ்டெல்லா மேரி, சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் PRO வேந்தர் Dr.காலா விஜயகுமார், கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.