விளாத்திகுளத்தில் மாபெரும் இலவச எலும்பியல் சிறப்பு மருத்துவ முகாம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை மற்றும் அற்புதம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச எழும்பியல் சிறப்பு மருத்துவ முகாம் டாக்டர்.V. ஜேம்ஸ் சுந்தர் சிங் தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் அளிக்கப்படும் சேவைகள் மருத்துவர் ஆலோசனை மருத்துவர் பரிசோதனை முழங்கால் வலி,முதுகு வலி,கழுத்து வலி,எலும்பு முறிவு சிகிச்சை,பிறவி ஊன சிகிச்சை போன்றவைகளுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நடைபெற்ற முகாமில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி மற்றும் கிராமங்களில் இருந்து 200 கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டடு பயன் பெற்றனர்.
இந்நிகழ்வில் சாந்தி மருத்துவமனை டாக்டர் ஆத்திமுத்து, டாக்டர். இன்பராஜ், டாக்டர்.ப்ரிஸில்லா இன்பராஜ், மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.