தூத்துக்குடியில் மது குடித்ததை தந்தை கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.


தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்தவர் சாலமோன் மகன் மனோ கிறிஸ்டோபர் (29),இவர் அங்குள்ள ஒரு பிளேவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தீபாவளி போனஸ் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த மனோ கிறிஸ்டோபர்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.