விளாத்திகுளம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ வைப்பார் மற்றும் வைப்பார் பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால், தங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய பொது நிதியிலிருந்து வைப்பார் பகுதியில் குடிநீர் கிணறு அமைக்க ரூ.10 லஞ்சமும் அதேபோன்று கீழ வைப்பார் பகுதி மக்களுக்கு குடிநீர் கிணறு அமைக்க ரூ.10 லட்சம் என மொத்தமாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று வைப்பார் ஆற்றுப்பகுதியில் குடிநீர் கிணறு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கிணறு அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கீழவைப்பார், வைப்பார் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
குடிநீருக்காக 20 லட்சம் மதிப்பில் கிணறு அமைக்கும் பணி துவக்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செல்போன் வாங்கி தராததால் பெண் தூக்கிட்டு தற்கொலை.
அடுத்த
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் கைது.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026