தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள
சின்னமலை குன்று கிராமத்தைச் சேர்ந்த
தங்கவேல் வயது ( 60)
இவர், எட்டயபுரத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை
வாங்குவதற்காக பேருந்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்,
அப்போது
படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராஜ்(53) என்பவர் கோவில்பட்டியில் இருந்து படந்தபுளி
கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது.எட்டையாபுரம்
பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த தங்கவேல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தங்கவேல் படுகாயம் அடைந்தார்,
இதனை அடுத்து
தங்கவேலை அக்கம் பக்கத்தினர் எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு
அனுமதித்தனர், ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், தங்கவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்,இந்த விபத்து
குறித்து எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.