தூத்துக்குடியில் இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் மாரிச்செல்வம் (25), இவர் தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி வந்து கொண்டிருந்தபோது, தூத்துக்குடி FGJ குடோன் அருகே எதிரே வந்த ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயம் அடைந்த மாரிச்செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரிச்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரான தூத்துக்குடி 3வது மைல் பகுதியை சேர்ந்த காந்தி மகன் கலைச்செல்வன் (22)என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.