தூத்துக்குடி அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!


தூத்துக்குடி அருகே உள்ள மேல தட்டாபாறை கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் பாலாஜி (36), இவர் அடிக்கடி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார், இந்நிலையில் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பாலாஜிக்கும் மனைவி சந்தனமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, மனைவி சந்தனமாரி பாலாஜி குடித்ததை கண்டித்துள்ளார். இதில் மன வேதனை அடைந்த பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தட்டாபாறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.