தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர்-அங்கமங்கலத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் என்பவரின் மகன் மணிராஜ் (19), இவர் பிளம்பர்  வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் இசக்கிபாண்டி என்பவரின் வீட்டில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தபோது ,மணிராஜ் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.