தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் துரைமுருகன் (28), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி சென்று கொண்டிருந்தபோது, புதுக்கோட்டை அருகே பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் துரைமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.