தூத்துக்குடி அருகே விஷம் குடித்து இளைஞர் உயிரிழப்பு.



தூத்துக்குடி அருகே உள்ள உமரிக்கோட்டை - வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன்  ராமமூர்த்தி (25), இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனவருத்தியில் இருந்து வந்த ராமமூர்த்தி ஊரின் அருகே காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார், இதனை அடுத்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ராமமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.