தூத்துக்குடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளரை கத்தியால்  தாக்க முயன்ற இளைஞர் கைது!


தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் சுப்புராஜ், இவர் வழக்கம் போல் பூபல்ராயபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்போது அங்கு இருந்த டூவிபுரம் 10 வது தெருவை சேர்ந்த ராஜாமணி(32) என்ற இளைஞர், உதவி ஆய்வாளர் சுப்புராஜை மது போதையில் கொலை மிரட்டல் விடுத்து,கத்தியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ராஜாமணியை போலீசார் கைது செய்தனர், ஏற்கனவே ராஜாமணி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.