கயத்தாறு அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞர் போக்ஸோவில் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு கோனார் கோட்டை புதூரை சேர்ந்த குமார் என்பவர் மகன் மகேஷ் குமார் (21). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ் குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.