எட்டயபுரத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் கோட்டை தெற்குதெருவை சேர்ந்தவர் இவரது மனைவி சைபுன் நிஷா (34), இவர் வீட்டில் உள்ள கம்பரசர் மோட்டாரில் தண்ணீர் ஊற்றும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சைபுன்நிஷா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார், இது குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீசார் சைபுன் நிஷாவின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர், சைபுன்நிஷாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.