தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து மோதி  பெண் உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் சுடலைமணி இவரது மனைவி பேச்சிக்கனி(45),இவர்களது மகன் முத்து(16) மற்றும் உறவினர் பாண்டித்துரை(20) ஆகியோர் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சாத்தான்குளத்தில் இருந்து தூத்துக்குடி வந்து கொண்டிருந்தபோது, தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில், கோரம்பள்ளம் பல்க் அருகே பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி மூன்று பேரும் காயம் அடைந்தனர், இதில் பேச்சிக்கனி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.