தூத்துக்குடி அருகே  கணவன் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை?


தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி திம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயசெல்வம்(38), இவரது மனைவி பொற்கொடி,இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகியும்  குழந்தை இல்லாமல் மன வருத்தத்தில் இருந்து வந்த ஜெயசெல்வம்     கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கணவர் ஜெயசெல்வம் பிரிவை தாங்க முடியாமல் மன வேதனையில் இருந்து வந்த  பொற்கொடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.