குறுந்தகவல் வருவது 35 கிலோ ஆனால் கொடுப்பதோ 20கிலோ அரிசி - கயத்தார் பகுதியில் நியாய விலை கடைகளில் நூதன மோசடி என புகார்!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வடக்கு இலந்தைக்குளத்தில் இன்று பெண்மணி ஒருவர் நியாய விலை கடைகளில் அரிசி வாங்கியுள்ளார். அரிசி குறைவாக போடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்மணி, நியாய விலையில் கடையில் கேட்ட போது.. அரசு கொஞ்சம் தான் அரிசி கொடுத்துள்ளது. உங்களுக்கு இவ்வளவு தான் என்று கூறியுள்ளனர்,ஆனால் அந்த பெண்மணி செல்போனிற்கு 35 கிலோ அரிசி வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இது குறித்து அந்த பெண்மணி நியாய விலை கடையில் கேட்ட போது சரியான பதில் இல்லை..
இது குறித்து விசாரித்த போது , பல கிராமங்களில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் இது போன்று முறைகேடு நடைப்பெற்று வருவதாகவும், குறிப்பாக வயதானவர்களை குறிவைத்து, இது போன்ற மோசடி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த அரிசி அப்படியே ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் கைகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.